களைகட்டிய கோல பொடி விற்பனை தவெக பிரசார கூட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் விதிகளை மீறினால் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

ஈரோடு, டிச. 17: பெருந்துறையில் தவெக பிரசார கூட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரசார கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிரசாரக்கூட்டம் அமைந்துள்ள இடத்திலிருந்து சேலம் மார்க்கமாக கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் குன்னத்தூர் சாலை, ஐஆர்டிடி பாலம், சீனாபுரம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி வழியாக சென்று கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு செல்லலாம்.

பிரசாரக்கூட்டத்திற்கு பெருந்துறை, சென்னிமலை, காங்கயேம் பகுதியிலிருந்து வருபவர்கள் பெருந்துறை புதிய பேருந்து நிலையம் வழியாக ஓலப்பாளையம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை சென்று நெடுஞ்சாலையை கடந்து ஓலப்பாளையம், பொன்முடி வழியாக சென்று கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு செல்லலாம். பிரசாரக்கூட்டத்திற்கு சத்தி, கோபி, குன்னத்தூர் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் சீனாபுரம், ஆயிக்கவுண்டன்பாளையம் வழியாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு செல்லலாம்.

பிரசார கூட்டத்திற்கு கோவை மார்க்கமாக வரும் வாகனங்கள் கள்ளியம்புதூர் சர்வீஸ் சாலை வழியாக விஜயமங்கலம் சென்று சந்தைப்பேட்டை வழியாக, பஞ்சாயத்து அலுவலகம் வழியாக, ரூட்ஸ் பள்ளி வழியாக பொன்முடி சென்று, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு செல்லவேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் சேலம் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கள்ளியம்புதூர் பிரிவு, கிரே நகர், திங்களூர், துடுப்பதி வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மரங்களில் ஏற தடை
பிரசார கூட்டத்திற்கு ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசுகள் வெடிக்க எங்கும் அனுமதியில்லை, மின்கம்பங்கள், மரங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நிற்க கூடாது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர்களின் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஊர்வலம், ரோடுஷோ அனுமதி கிடையாது. முக்கிய பிரமுகர் பயணம் செய்யும் வாகனத்தை பின் தொடர்ந்தோ அல்லது பக்கவாட்டிலோ செல்லவோ, செல்பி எடுக்கவோ அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: