ஈரோடு கோபி சொசைட்டி பவானி, வாய்க்கால்பாளையத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மக்கள் காத்திருப்பு போராட்டம்

பவானி, டிச. 16: பவானியை அடுத்த வாய்க்கால்பாளையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பெரியார் நகர் விநாயகர் கோயில் முன்பாக பொதுமக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்க்கால்பாளையத்தில் சாலையின் நடுவில் உள்ள மீன் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் வீதி பணியை விரைந்து முடித்திட வேண்டும். சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற வடிகால் அமைத்திட வேண்டும். திறந்தவெளி கிணற்றுக்குக்கு கிரில் மூடி அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு கிளை செயலாளர் தங்கராசு தலைமை தாங்கினார். இது குறித்த தகவலின்பேரில் ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலர் பாலாஜி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பவானி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக சாக்கடை தூர்வாரி கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் தொடர்ந்து பிற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற என தெரிவிக்கப்பட்டது. இதனால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: