சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஈரோட்டில் 2,260 பேர் எழுத்து தேர்வு எழுதினர்

ஈரோடு,டிச.22: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் உள்ள உதவி ஆய்வாளர்களின் காலிப்ப்பணியிடங்களை நிரப்பும் வகையில், 2025ம் ஆண்டிற்கான உதவி ஆய்வாளர்(சப்.இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில், வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வேளாளர் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் தேர்வு நேற்று நடைபெற்றது.

இதில், முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில், 837 பெண்கள் உள்பட 3,491 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில்,2,260 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 908 ஆண்கள், 323 பெண்கள் என மொத்தம் 1,231 பேர் பங்கேற்கவில்லை என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோவை டி.ஐ.ஜி. சசி மோகன், எஸ்.பி சுஜாதா தேர்வு அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

Related Stories: