நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க ராமதாஸ் தரப்பு தீர்மானம்!

விழுப்புரம்: நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க ராமதாஸ் தரப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ‘பொய்யான ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியது குறித்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 46 ஆண்டுகளாக 96,000 கிராமங்களுக்கு நடந்து சென்று உருவாக்கி இந்த கட்சியில் அன்புமணிக்கு உரிமை இல்லை. தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலையோ என அலைகிறார் அன்புமணி’ என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியும் பாமகவின் சின்னமும் எங்களிடம்தான் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: