வேலூர்: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வேலூர் மாவட்டத்திற்கு வரும் 17ம் தேதி வருகை தர உள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூருக்கு வரும் 17ம் தேதி காலை 11 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ளார். அவருடன் தமிழக கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் வருகின்றனர். பொற்கோயில் வளாகத்தில் உள்ள வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோயில்களில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர், சக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறார். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைத்து மரங்களை நட்டு வைக்கிறார். பின்னர் 12:30 மணிக்கு வேலூரில் இருந்து திருப்பதிக்கு செல்கிறார்.’ என்றனர்.
