சென்னை: தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நெட் தகுதித் தேர் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு 2ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 25ல் தொடங்கி அக்டோபர் 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வெழுத நாடு முழுவதும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை பட்டதாரிகள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று அறியலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது csirnet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
