சென்னையில் இருந்து புறப்படும் 70 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வரலாற்றில் இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். அதன் பின்பு கடந்த இரு தினங்களாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ஓரளவு சீரடைந்து, விமானங்கள் வருகை, புறப்பாடு ரத்துகள் குறைந்து வந்தன. நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் மொத்தம் 41 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒன்பதாவது நாளாக வருகை விமானங்கள் 14, புறப்பாடு விமானங்கள் 14 என மொத்தம் 28 விமானங்கள் மட்டுமே ரத்து என்று நேற்று காலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்க வில்லை. காலை 11 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு விமானங்கள் 33, வருகை விமானங்கள் 37 என மொத்தம் 70 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. விமானங்கள் ரத்து அதிகரிப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணம் மீண்டும் உயரக்கூடிய அபாயமும் ஏற்பட்டு உள்ளது. 15ம் தேதிக்குள் விமான சேவைகள் முழுவதுமாக சீரடைந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினத்தை விட நேற்று சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: