இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அருகே அமைந்துள்ள பலுசிஸ்தானின் சாமான் எல்லைப்பகுதியில் இரு நாடுகளை சேர்ந்த வீரர்களும் நேற்று மோதலில் ஈடுபட்டனர். இரு நாடுகளின் படைகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. பதானி பகுதியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மோட்டார் குண்டுகளை வீசியதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இதே போல் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், ஸ்பின் போல்டாக் பகுதியில் பாகிஸ்தான் தான் தாக்குதல் நடத்தியதாகவும், எனவே தான் ஆப்கன் படைகள் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு தொடங்கிய துப்பாக்கி சண்டை வெகுநேரம் நீடித்தது. இதில் 4 பேர் பலியானார்கள். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கன் மீது பாக். மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
- பாகிஸ்தான்
- ஆப்கான்
- இஸ்லாமாபாத்
- பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்
- சமன்
- பலோசிஸ்தான்
- பாக்கிஸ்தான்
- ஆப்கானிஸ்தான்
