சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் டிரம்பிற்கு அமைதி விருது

வாஷிங்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் டிரம்பிற்கு அமைதி விருது வழங்கப்பட்டது. சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபா, உலக அமைதியை வலியுறுத்தும் வகையிலும், விளையாட்டு மூலம் மக்களை ஒன்றிணைப்பவர்களைக் கவுரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் அமைதிக்கான விருது வழங்கப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோவிற்கும், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்து வரும் சூழலில், வாஷிங்டனில் 2026ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் குலுக்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிபா தலைவர் இன்பான்டினோ கலந்துகொண்டு, பிபா அமைதி விருதை அமெரிக்க அதிபர்டிரம்பிற்கு வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட டிரம்ப், ‘இது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவங்களில் ஒன்று’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related Stories: