காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் மூடிய அறைக்குள் நடக்கும் கொடுமைகள் ஒரே மாதிரியானவை!: ஹாலிவுட் பாடகர் மீது மாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க பாடகர் பில்லி ரே சைரஸின் முன்னாள் மனைவி ஃபயரோஸ், விவாகரத்து முடிந்து ஓராண்டுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் அவர் மீது கடுமையான மனநல துன்புறுத்தல் புகாரை மீண்டும் முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் பாடகர் பில்லி ரே சைரசும், ஆஸ்திரேலிய பாடகி ஃபயரோஸும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணம் முடிந்த ஓராண்டுக்குள்ளேயே, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்து வழக்கு நடைபெற்றபோது, ‘பில்லி ரே சைரஸ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், தன்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், மன ரீதியாகத் துன்புறுத்தியும் வந்தார்’ என்று ஃபயரோஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். மறுபுறம், ‘தனது பணத்திற்காகவும் புகழுக்காகவுமே ஃபயரோஸ் தன்னைத் திருமணம் செய்தார்’ என்று பில்லி ரே சைரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியில் ஜீவனாம்சம் ஏதுமின்றி அந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் விவாகரத்து முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபயரோஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஹாலிவுட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பதிவில், ‘20 வயதில் இருக்கும்போது வயதான ஒருவரைச் சந்தித்து, அவர் உங்களை பாராட்டி நம்ப வைப்பார்’ என்ற அர்த்தம் கொண்ட ஆடியோவுடன் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், ‘நர்சிசிஸ்டிக் அப்யூஸ் எனப்படும் சுயநலமிக்க தீவிர மனநலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் நீங்கள் மட்டுமல்ல, இதுபோன்று மூடிய அறைக்குள் நடக்கும் கொடுமைகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன’ என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளை குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்தப்பதிவு, மறைமுகமாக முன்னாள் கணவர் பில்லி ரே சைரஸையே தாக்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: