கூலி தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை தண்டராம்பட்டு அருகே பட்டப்பகலில்

தண்டராம்பட்டு, ஆக.23: தண்டராம்பட்டு அடுத்த கொட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(41), கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பூமா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும், தம்பதி வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்று விட்டனர். நேற்று மாலை பூமா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூமா இதுகுறித்து தனது கணவருக்கு தெரிவித்தார். அவரது கணவர் பாஸ்கரன் அளித்த புகாரின்பேரில் வாணாபுரம் எஸ்ஜ சவுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கூலி தொழிலாளி வீட்டில் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: