கலசப்பாக்கம், ஆக.22: கலசப்பாக்கம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இன்று கல்லூரியில் சேர இருந்த மாணவி பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன்(46), நெசவுத்தொழிலாளி. இவரது மகள் அஸ்வதா(19). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று பி.இ. படிப்பில் சேர இருந்தார். அதற்காக வங்கிக்கணக்கு தொடங்க தந்தை அருள்முருகனுடன் மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்களது மொபட் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அஸ்வதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அருள்முருகன் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரியில் சேர இருந்த மாணவி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று கல்லூரியில் சேர இருந்த மாணவி விபத்தில் பலி தந்தை கண்ணெதிரே பரிதாபம் கலசப்பாக்கம் அருகே
- கலசபாக்கம்
- கலசப்பாக்கம்
- அருள்முருகன்
- கலசப்பாக்கம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
- அஸ்வாடா
- திருவண்ணாமலை
