3 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

உத்தமபாளையம், ஆக. 11: உத்தமபாளையம் தென்னஞ்சாலை பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உத்தமபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த தோட்ட வீட்டில் திடீர் சோதனை நடத்தியதில் 3 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ. 50 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த சசிகனி (35) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: