தீ விபத்தில் வீடு சேதம் தஞ்சை எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு

தஞ்சாவூர், ஆக.9: தஞ்சாவூர் டவுன் கரம்பை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு சேதம் அடைந்த வீட்டை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 13 டவுன் கரம்பை கீழத்தெருவில் நேற்று முன்தினம் இரவு அன்னகாமு என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் சேதம் அடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் உரிய நிவாரணம் கிடைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் கீழவாசல் பகுதி கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் நீலகண்டன், 13வது வட்ட கழக செயலாளர் சலீம் அஹமது, ராமையா முரளி, சேகர், ராஜேஷ், வினோலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Related Stories: