கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி செப்டம்பரில் இறுதி துணைத்தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு

மதுரை, ஆக. 8: மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2021 வரை 7 பாடத்திட்டங்கள் கொண்ட முழுநேர மற்றும் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 2022 முதல் புதிய பாடத்திட்டத்தின்படி இரு பருவ முறைகளாக பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பழைய பாடத்திட்டத்திற்கு முடிவு கட்டுவதற்காக, கடந்த மார்ச் மாதம் துணைதேர்வு நடத்தப்பட்டது, அதில் தோல்வி அடைந்தவர்களுக்கு இறுதி வாய்ப்பாக, செப்டம்பர் மாதம் மீண்டும் துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதில் தேர்ச்சி பெறாதவர்கள், புதிய பாடத்திட்டத்தின்படி பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். இந்த துணைத்தேர்வுக்கு 2 பாஸ்போட் அளவு புகைப்படம், 10 அல்லது 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், இறுதி நுழைவுதேர்வு எழுதிய நகல் மற்றம் தேர்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் ஆகியவற்றுடன் நேரில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை 0452-3551204 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் மற்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: