பேராசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்

நாமக்கல், ஆக.5:குமாரபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை ஒருவர், மாணவர் அசோசியேசனில் பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி எங்களிடம் ரூ.1300 மற்றும் ரூ.1900 வீதம் மொத்தம் ரூ.1.92 லட்சம் வசூல் செய்தார். அவர் கல்லூரி நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் பணம் வசூலித்துள்ளது எங்களுக்கு பிறகு தான் தெரியவந்தது. தற்போது அவர் கல்லூரிக்கு வருவதை நிறுத்தி கொண்டார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி எங்களிடம் வசூல் செய்த பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: