×

பிரபாஸ் கால் எலும்பு முறிவு

ஐதராபாத்: படப்பிடிப்பில் நடந்த விபத்தில் நடிகர் பிரபாஸ் படுகாயம் அடைந்தார். ‘கல்கி 2898’ படத்துக்கு பிறகு ‘ஸ்பிரிட்’, ‘ராஜா சாப்’, ‘ஃபவ்ஜி’, ‘சலார் 2’ ஆகிய படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் ‘ஃபவ்ஜி’ படத்தை ஹனுராகவபுடி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் அன்னபூரணி ஸ்டுடியோவில் நடந்து வந்தது. அப்போது காரிலிருந்து ஜம்ப் செய்து அடியாட்களுடன் பிரபாஸ் மோதும் சண்டைக் காட்சி படமாக்கி வந்தார்கள்.

இந்த காட்சியில் டூப் போடாமல் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் சொன்னதால், பிரபாசும் அதேபோல் நடிக்க சம்மதித்தார். காரிலிருந்து ஜம்ப் செய்தபோது, பின்னால் வந்த அடியாளின் பைக் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியுள்ளது. இதில் பிரபாஸ் கீழே விழுந்தது இடது கால் எலும்பு முறிந்தது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Prabhas' ,Hyderabad ,Prabhas ,Hanuragavapudi ,
× RELATED மாளவிகாவை அழவைத்த பிரபாஸ்