×

மகாலட்சுமி கேரக்டரில் பாக்யஸ்ரீ போர்ஸ்

ஐதராபாத்: கடந்த 2023ல் ரிலீசான ‘யாரியான் 2’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், பாக்யஸ்ரீ போர்ஸ். தொடர்ந்து ‘சந்து சாம்பியன்’, ரவிதேஜா நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் பச்சன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ராம் பொதினேனியுடன் அவர் இணைந்துள்ளார். இப்படத்தை ‘மிஸ் ஷெட்டி அன்ட் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தின் இயக்குனர் மகேஷ் பாபு இயக்குகிறார்.

இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, இதில் மகாலட்சுமியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். தவிர, விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்திலும், துல்கர் சல்மானுடன் ‘காந்தா’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

 

Tags : Bhagyashree Pors ,Mahalakshmi ,Hyderabad ,Ravi Teja ,Ram Pothineni ,
× RELATED நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் போலீசார் நோட்டீஸ்