சென்னை: ‘இந்தியன் 3’ படம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தை இயக்கியபடி ெதலுங்கில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் இயக்கி வந்தார். ‘இந்தியன் 2’ படம் முதலில் வெளியானது. இந்நிலையில் ‘இந்தியன் 3’ படத்தின் பெரும்பாலான காட்சிகளையும் ஷங்கர் இயக்கி முடித்திருந்தார். இப்போது ஜனவரி 10ம் தேதி ‘கேம் சேஞ்சர்’ படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் மீது லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது. அதன்படி, ‘‘இந்தியன் 3 படத்தை முடித்துவிட்டுதான், ‘கேம் சேஞ்சர்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். இதற்கு ஷங்கர் ஒத்துழைக்காவிட்டால் தமிழ்நாட்டில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. ‘இந்தியன் 3’ படத்தில் ஒரு பாடல் காட்சியும் சில வசன காட்சிகளும் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.