- சென்னை
- சூரியன்.ஜி
- எஸ்.வி.பிரகாஷ்
- ரேம்
- ராஜீவ் கோவிந்த்
- அபிஷேக் ஜார்ஜ்
- யுக்தா பெர்வி
- சித்தாரா விஜயன்
- ஹரிஷ் பெராதி
- அஷ்ரப் குருக்கள்
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அடுத்த மாதம் திரைக்கு வரும் படம், ‘டெக்ஸ்டர்’. சூரியன்.ஜி எழுதி இயக்க, ராம் எண்டர்டெயினர்ஸ் சார்பில் எஸ்.வி.பிரகாஷ் தயாரித்துள்ளார். ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன், ஹரீஷ் பெராடி, அஷ்ரப் குருக்கள், ஷோபா பிரியா, பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் நடித்துள்ளனர்.
சிவம் கதை எழுத, ஆதித்ய கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ நாத் விஜய் இசை அமைக்க, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். குடகு மலை, கேஜிஎஃப், ஓசூர், வயநாட்டில் ஷூட்டிங் நடந்துள்ளது. சைக்கோவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இரு அப்பாவிப் பெண்களை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.