×

விஜய தேவரகொண்டா – ராஷ்மிகா ரகசிய நிச்சயதார்த்தம்?

ஐதராபாத்: தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இவர் யாரை காதலிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் இருந்து வந்தது. எனவே, திருமண வதந்திகள் குறித்த செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது. தற்போது சாஹிபா என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இதற்கிடையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

அதன்படி, இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும், ஓட்டல்களில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் படங்களும் வெளியாகி வைரலானது. இதற்கிடையே இருவரும் காதலிப்பதை அவர்களே ஒப்புக்கொண்டனர். பிறகு ‘புஷ்பா 2’ படம் பார்க்க விஜய்தேவரகொண்டா குடும்பத்தினருடன் ராஷ்மிகா தியேட்டருக்கு சென்ற வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில், ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாகவும், இவர்களின் திருமணம் ஆறு மாதங்களுக்கு பிறகு நடைபெற இருப்பதாகவும் இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

Tags : Vijay Deverakonda ,Rashmika ,Hyderabad ,
× RELATED ரூ.10 கோடி சம்பளம் வாங்கினேனா? ராஷ்மிகா ஆவேசம்