×

12 ஆண்டுகள் கழித்து அம்மாவான ராதிகா ஆப்தே

லண்டன்: கபாலி படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். லண்டனை சேர்ந்த பெனடிக் என்பவரை காதலித்து மணந்தார். கணவர் லண்டனில் இருந்தாலும் மும்பையில் தங்கி படங்களில் நடித்து வந்தார். திருமணமாகி 12 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் ராதிகா ஆப்தே, பெனடிக் தம்பதி சோகத்தில் இருந்து வந்தனர். இது பற்றி ராதிகா ஆப்தே கூறும்போது, ‘குழந்தைக்காக போகாத கோயில்கள், சர்ச்சுகள், தர்காக்கள் கிடையாது. பார்க்காத மருத்துவர்கள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்கு இது பெரும் வேதனையாக இருந்தது’ என்றார்.

இந்நிலையில் அவர் கர்ப்பமானார். இதையடுத்து தம்பதி மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது ராதிகா ஆப்தேவிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அதில், தனக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாகவும் தனக்கு பிறந்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை. அந்த போட்டோவை பார்த்த நடிகை ராதிகா ஆப்தேவின் தோழியான சாரா ஆப்சன்ஸ், ‘எனது சிறந்த பெண்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Tags : Radhika Apte ,London ,Rajinikanth ,Benedict ,Mumbai ,
× RELATED லண்டனில் இருந்து சென்னை வந்த...