×

புஷ்பா 2 படம் பார்த்த ரசிகரின் காதை கடித்த கேன்டீன் ஓனர்

போபால்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. ஐதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, அங்கு அல்லு அர்ஜுன் சென்ற நிலையில் அவரை காண ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்ததால் அதில் சிக்கி ரேவதி(39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆந்திராவில் ஒரு திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருந்த போதே 35 வயதுள்ள மதிக்கத்தக்க நபர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

இதன் வரிசையில் மற்றொரு சம்பவம் புஷ்பா 2 திரையிடப்பட்ட தியேட்டரில் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசம் குவாலியர் நகரத்தில் ஷபிர் என்ற நபர் ‘புஷ்பா 2’ படம் பார்க்க திரையரங்கு சென்றிருக்கிறார். அப்போது இடைவேளை நேரத்தில் ஸ்நாக்ஸ் வாங்க கேண்டீனுக்கு சென்றுள்ளார். அவர் ஸ்நாக்ஸ் வாங்கிவிட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கேண்டீன் ஓனர் அவரிடம் பணம் கேட்க பின்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பு வரை சென்றுள்ளது. அப்போது கேண்டீன் உரிமையாளர் ஷபீரின் ஒரு பக்க காதை கடித்துள்ளார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட ஷபீர், அங்கிருந்து அலறியபடி ஓடி இருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

Tags : Allu Arjun ,Rashmika Mandanna ,Fahadh Faasil ,Hyderabad ,Revathi ,
× RELATED அல்லு அர்ஜுனுக்கு கூடிய கூட்டம்...