×

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்

சென்னை: உலக அளவில் செஸ் என்று சொல்லப்படும் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்தவர், விஸ்வநாதன் ஆனந்த் (54). விரைவில் அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. மயிலாடுதுறையில் கடந்த 1969 டிசம்பர் 11ம் தேதி பிறந்த அவர், 1988ல் இந்தியாவுக்கு முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். 5 முறை உலக சாம்பியன், 2 முறை உலகக்கோப்பை செஸ் சாம்பியன் என்பது உள்பட பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் அவர் மூலமாகவே செஸ் போட்டி பிரபலமானது. தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றை ஏ.எல்.விஜய் திரைப்படமாக இயக்குகிறார்.

விஸ்வநாதன் ஆனந்த் கேரக்டரில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கிறார். திரைக்கதையை ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து சஞ்சய் திரிபாதி எழுதுகிறார். மஹாவீர் ஜெயின், ஆஷிஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன், கங்கனா ரனவத் நடிக்கும் ‘லைட்’ என்ற படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி வருகிறது.

Tags : Viswanathan Anand ,AL Vijay ,Chennai ,Mayiladuthurai ,India ,
× RELATED ஆனந்திற்கு பின் 2வது வீரராக அதிரடி...