×

ரூ.250 கோடி சொத்தை பாதுகாக்க நடிகர் பாலா 4வது திருமணம்

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் பாலா 4வதாக உறவினர் பெண்ணை மணந்தார். கொச்சியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றது. தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், வீரம் உள்பட பல படங்களில் நடித்தவர் பாலா. இவர் பிரபல டைரக்டர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். மலையாளத்தில் களபம், பிக் பி, புதிய முகம், புலி முருகன் உள்பட ஏராளமான படங்களில் வில்லன் உள்பட முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர், கர்நாடகாவை சேர்ந்த சந்திரா என்பவரை முதலாவதாக ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு அவரை பிரிந்து கடந்த 2010ம் ஆண்டு பிரபல மலையாள பாடகியான அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். ஒரு மகள் உள்ளார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமிர்தா சுரேஷை விவாகரத்து செய்தார் பாலா.

அதன் பிறகு எலிசபத் என்பவருடன் சில வருடங்கள் வாழ்ந்து வந்தார். இவரை பாலா முறைப்படி திருமணம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அவரையும் பாலா பிரிந்தார். இந்நிலையில் உறவினரான சென்னையை சேர்ந்த கோகிலா என்பவரை நடிகர் பாலா நேற்று காலை 4வதாக திருமணம் செய்தார். கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் கோகிலாவின் கழுத்தில் பாலா தாலி கட்டினார். பின்னர் அவர் கூறுகையில், ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நான் உடல்நலம் தேறியுள்ளேன். எனக்கு ஒரு துணை தேவை என்பதால் இப்போது திருமணம் செய்துள்ளேன். எனது 250 கோடி ரூபாய் சொத்தை பாதுகாக்கவும் வேண்டும். உறவினர் என்பதால் எனக்கு அவர் மீது நம்பிக்கை உண்டு. முடிந்தால் என்னை வாழ்த்துங்கள்’ என்றார்.

Tags : Bala ,Thiruvananthapuram ,Bala 4 ,Kochi ,Leopard ,
× RELATED 3 நடிகைகளை காதலித்தேன்: இயக்குனர் பாலா தகவல்