×

தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி அன்று, நள்ளிரவு கண் விழித்து திருமால் கோயிலுக்கு சென்று வந்தால், வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பல்வேறு பெருமாள் கோயில்கள் இருந்தாலும், ஒரு சில பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்

அரியக்குடி திருவேங்கமுடையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

அரியக்குடி திருவேங்கமுடையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4.12 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.

The post தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Paradise Gate ,Perumal ,Vaikunda Ekadasi ,Tamil Nadu ,Chennai ,Thirumal Temple ,Vaikunda ,
× RELATED வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.