- சென்னை
- அமைச்சர்
- மா. சுப்பிரமணியன்
- சென்னை மாநகர சபை
- துணை மேயர்
- கராத்தே தியாகராஜன்
- கன்னப்பன் திடல் மீன் ஸ்டோர்
- மேஜர்
- சுப்பிரமணியன்
- தின மலர்
சென்னை: கவுன்சிலரை தாக்கிய வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், கடந்த 2002ம் ஆண்டு, அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அப்போது திமுக உறுப்பினர்கள் தாக்கியதாக அதிமுக மன்ற உறுப்பினர்கள் சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய 7 பேருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யபட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடைபெற்றது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் 2019-ல் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் எதுவும் நிருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுதலை செய்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியம் அளித்தவர்கள் பிறழ்சாட்சியாக மாறியதாலும், சரிவர நிரூபிக்காததாலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 22 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
The post கவுன்சிலரை தாக்கிய வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனை விடுதலை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.