- தமிழ்
- ஆளுநர் ஆர் என்.
- உச்ச நீதிமன்றம்
- ரவி
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- R.N.
- ஆளுநர் ஆர் என் ரவி
- தமிழ்நாடு
- தின மலர்
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்த ரிட் மனுவில்; ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. ஆளுநரின் செயல்பாடு அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது. விளம்பரம் தேடும் நோக்கத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதால் அவரை பதவி நீக்கம் வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை appeared first on Dinakaran.