- நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- சென்னை
- திருநெல்வேலி
- பாரத் எக்ஸ்பிரஸ்
- சென்னை எழும்பூர்
- திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- தின மலர்
சென்னை: திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு ஜனவரி 15க்கு தள்ளிவைத்துள்ளனர். திருநெல்வேலி – சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2025 ஜனவரி 15 ஆம் தேதி முதல் 16 பெட்டிகள் கொண்ட தொடர் ரயிலுடன் இயங்கும்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது.
நெல்லை வந்தே பாரத்: மறுமார்க்கத்தில் மதியம்2:45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6:35க்கு திருச்சி, இரவு 8:20க்கு மதுரை வழியாக இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. இந்த ரயிலில் 7 AC சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்று வலியுத்தினர். இந்நிலையில் 8 பெட்டிகள் கோடா ரயிலை 16 பெட்டிகளாக மாற்றி ஜனவரி 11ம் தேதி இயக்கப்படும் என்று அறிவித்தனர். பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக, தென்னக ரயில்வே ரயில் எண் 20666/20665 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் தற்போதைய 8 பெட்டிகள் அமைப்பை 16 பெட்டிகள் அமைப்பாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில் ஜனவரி 11ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 15 ஆம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் தொடர் ரயில் கொண்டு இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
The post நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 15ம் தேதி முதல் 16 பெட்டிகள் கொண்டு இயங்கும் appeared first on Dinakaran.