×

இரு தரப்பு ஒப்பந்தத்தின் படி அணுசக்தி நிலையங்களின் பட்டியல் இந்தியா-பாகிஸ்தான் பரிமாற்றம்

புதுடெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி தங்கள் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை நேற்று பரிமாறி கொண்டன. இந்தியா, பாகிஸ்தான் இடையே, கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, , இரு நாடுகளும், தங்களின் அணு மின் நிலையங்கள், அணு சக்தியால் இயங்கும் பிற அமைப்புகள் குறித்த பட்டியலை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், ஜன. 1ம் தேதி, இந்தப் பட்டியல், இருநாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அல்லது போர் நடைபெறும் போது, அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளானால், இருநாடுகளுக்கு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டும் நேற்று இந்த பட்டியல் பரிமாறப்பட்டது. காஷ்மீர் பிரச்னை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இது நடந்தது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக 34 வது பரிமாற்றம் ஆகும்.

The post இரு தரப்பு ஒப்பந்தத்தின் படி அணுசக்தி நிலையங்களின் பட்டியல் இந்தியா-பாகிஸ்தான் பரிமாற்றம் appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Pakistan ,Dinakaran ,
× RELATED சர்வதேச அளவில் இணையவழி குற்றங்கள்...