×

சிம்லா ஈடி உதவி இயக்குநர் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு: ரூ.1 கோடி பணத்துடன் சகோதரர் கைது

புதுடெல்லி: இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் உதவி இயக்குநரும், டெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றி வரும் அவரது மூத்த சகோதரர் விகாஸ் தீப்பும் சேர்ந்து லஞ்சம் வாங்குவதாக சிபிஐக்கு புகார் வந்தது. இவர்கள் இருவரும், தொழிலதிபரை மிரட்டி ரூ.55 லட்சம் பெற்றுள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் சண்டிகர் பிரிவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய சென்ற போது இருவரும் பணத்துடன் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஈடி உதவி இயக்குனரின் சகோதரர் விகாஸ் தீப்பை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈடி உதவி இயக்குனரை தேடி வருகிறார்கள்.

The post சிம்லா ஈடி உதவி இயக்குநர் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு: ரூ.1 கோடி பணத்துடன் சகோதரர் கைது appeared first on Dinakaran.

Tags : CBI ,Shimla ED ,New Delhi ,Assistant Director ,Enforcement ,Directorate ,Shimla, Himachal Pradesh ,Vikas Deep ,Punjab National Bank ,Delhi ,Assistant ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர்...