×

அமித்ஷா உருவ பொம்மையை எரித்து விசிக ஆர்ப்பாட்டம்

வாழப்பாடி, டிச.21: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாழப்பாடி வடக்கு ஒன்றியம், பேளூர் நகரம் சார்பில், நேற்று வாழப்பாடி பஸ் நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அமித்சாவின் உருவ பொம்மையை விசிகவினர் எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வாழப்பாடி ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாழப்பாடி நகர செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அமித்ஷா உருவ பொம்மையை எரித்து விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Vazhapadi ,Vazhapadi North Union ,Liberation Tigers ,Tamil Nadu, Belur ,Home Minister ,Dinakaran ,
× RELATED இன்டர்போல் போலீஸ் போல் இந்தியாவில்...