- ஓமலூர்
- இந்திய மாணவர் சங்கம்
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
- மாணவர் சங்கம்
- வசீகரன்…
- தின மலர்
ஓமலூர், ஜன.10: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பாக, இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர் சங்க நிர்வாகி வசீகரன் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே முடிவு செய்வார் என பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள புதிய விதியை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், புதிய விதிகளை எதிர்த்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சம்சீர் அகமத் கூறுகையில், ‘மாநில அரசு கொண்டு வரும் சிறப்பு தீர்மானத்திற்கு, ஆளுநர் ஒப்புதல் கொடுக்க போவதில்லை. அதனால், திமுக உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளும் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்,’ என்றார்.
The post மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.