- சேலம் ரயில் நிலையம்
- சேலம்
- ரயில்வே பொலிஸ்
- கேரளா
- ஒடிசா,
- ஆந்திரா
- போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலகு காவல்துறை
- தின மலர்
சேலம், ஜன.7: ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீசார் தொடர்ந்து ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரயில்வே போலீசாரும் போதை பொருள் தடுப்புபிரிவு போலீசாரும் இணைந்து நேற்று ரயில் நிலைய பிளாட் பார்மில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது 3வது பிளாட்பாார்மில் கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது பிளாஸ்டிக் கவர் பண்டல்களில் 5கிலோ கஞ்சா இருந்தது. அதனை கடத்தி வந்த மர்மநபர், போலீஸ் ரோந்து வருவதை பார்த்ததும் போட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. ₹3 லட்சம் மதிப்புள்ள 5கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இக்கஞ்சாவை கடத்தி வந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, சேலம் வழியே செல்லும் ரயில்களில் போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
The post சேலம் ரயில் நிலையத்தில் 5கிலோ கஞ்சா சிக்கியது appeared first on Dinakaran.