இடைப்பாடி, ஜன. 9: தைப்பொங்கலையொட்டி, சேலம் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு, பந்தய சேவல் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அலங்கார கயிறுகள், சலங்கை, சங்கு, மணி என பல வண்ண கயிறுகள் கட்டி கானும் பொங்கல் அன்று சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களே உள்ள நிலையில், இடைப்பாடி சுற்றியுள்ள கோணசமுத்திரம், கன்னியாம்பட்டி, இருப்பாளி, சமுத்திரம், புதுப்பாளையம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல வண்ண கயிறுகள், மணி, சலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இடைப்பாடி புதன்சந்தையில் நேற்று வியாபாரிகள் கடை போட்டு கயிறு விற்பனை செய்தனர். மணி, சலங்கை முடி கயிறு என பல்வேறு ரகங்கள் ₹10 முதல் ₹150 வரை விற்பனையானது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களின் ஆடு, மாடுகளுக்கு புதிய கயிறுகளை வாங்கிச்சென்றனர்.
The post அலங்கார கயிறுகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.