தாரமங்கலம், ஜன.10: தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் உள்ள 2 கட்டிடத்தில் ஒரு கட்டிடத்தின் மேல், ஆளுயர அரச மரம் வளர்ந்துள்ளது. இதனால் சுவற்றில் விரிசல் விழுந்துள்ளது. இதனை ஆசிரியர்கள் கவனிக்காமல் அலட்சியமாக உள்ளனர். கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. உயிர் சேதம் ஏற்படும் முன்பாக, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அரச மரத்தை அகற்றி, பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கட்டிடத்தின் மீது வளர்ந்துள்ள மரம் appeared first on Dinakaran.