சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை ெகாண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட மேற்கு திசையில் நேற்று நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக, வட தமிழக கடலோரப் பகுதியில் நேற்று ஒருசில இடங்களிலும், பிற மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் லேசான மழை நேற்று பெய்தது.
இதற்கிடையே அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிக்கு இன்று நகர்ந்து செல்லும் என்பதால், இன்று முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படும்.
The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.