×

குட்டையில் பைக் பாய்ந்து 2 வாலிபர்கள் சிறுமி பலி

உடுமலை: சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையை சேர்ந்த பிளஸ் 1 மாணவி தர்ஷனாவுக்கும் (17) இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டது. கடந்த 18ம் தேதி தர்ஷனாவின் பிறந்தநாளை கொண்டாட ஆகாஷ் உடுமலை வந்தார். அங்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மாரிமுத்து (20)வும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள மூவரும் ஒரே பைக்கில் வெளியில் சென்றவர்கள், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் மானுப்பட்டி- எலையமுத்தூர் சாலையில் உள்ள ஒரு குட்டையில் 3 பேரின் உடல்கள் மிதந்தன. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து குட்டையில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என தெரியவந்து உள்ளது.

The post குட்டையில் பைக் பாய்ந்து 2 வாலிபர்கள் சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Akash ,Chennai Velacheri ,Darshana ,Tarchichkottai ,Udumala ,Tiruppur district ,
× RELATED இன்ஸ்டா தோழி, நண்பருடன் சென்னை வாலிபர் குளத்தில் மூழ்கி பலி