×

ஜெர்மனியில் அதிபர் ஓலாப் ஆட்சி கவிழ்ந்தது

பெர்லின்: ஜெர்மன் அதிபராக இருப்பவர் ஓலாப் ஸ்கோல்ஸ். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி ஆட்சி அமைந்தது. அவர் கொண்டுவந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் பெற்றன. இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு நேற்று நாடாளுமன்றத்தில் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 733 இடங்களில் அதிபர் ஓலாப்பிற்கு எதிராக 394 வாக்குகளும், ஆதரவாக 207 வாக்குகளும் பதிவானது. 116 பேர் வாக்களிப்பை புறக்கணித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்து விட்டது. ஜெர்மன் அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிடப்பட்டால் பிப்.23ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

The post ஜெர்மனியில் அதிபர் ஓலாப் ஆட்சி கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : President Olaf ,Germany ,Berlin ,Olaf Scholz ,President ,Olaf ,Dinakaran ,
× RELATED ஜெர்மனியின் மக்டக்பெர்க் நகரில் உள்ள...