×

ஜெர்மனியின் மக்டக்பெர்க் நகரில் உள்ள சந்தைக்குள் அதிவேகமாக சென்ற கார் புகுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

பெர்லின்: ஜெர்மனியின் மக்டக்பெர்க் நகரில் உள்ள சந்தைக்குள் அதிவேகமாக சென்ற கார் புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கேக், பரிசுப் பொருட்கள் வாங்க குவிந்திருந்த மக்கள் மீது காரை ஏற்றி கொலை என தகவல் வெளியாகியுள்ளது. கார் மோதியதில் படுகாயடைந்த 60க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய சவுதியைச் சேர்ந்த மருத்துவரை கைது செய்து ஜெர்மனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஜெர்மனியின் மக்டக்பெர்க் நகரில் உள்ள சந்தைக்குள் அதிவேகமாக சென்ற கார் புகுந்ததில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Muckberg ,Berlin ,Christmas ,Mudakberg, Germany ,Dinakaran ,
× RELATED ஜெர்மனியில் அதிபர் ஓலாப் ஆட்சி கவிழ்ந்தது