×

கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் மல்லி, ஜாதி மல்லி மற்றும் முல்லையின் வரத்து தீடீர் குறைவால் 4 மடங்கு விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லி, ஜாதி மல்லி மற்றும் முல்லையின் வரத்து தீடீர் குறைவால் நேற்று 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது. அதேபோல் அனைத்து பூக்களின் விலையும் கூட இரண்டு மடங்கு விலை உயர்நதுள்ளது.

ஒரு கிலோ மல்லி ரூ.2,300லிருந்து ரூ.2,600 க்கும், ஐஸ் மல்லி ரூ.2,000 லிருந்து ரூ.2,300க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.600லிருந்து ரூ.800 க்கும், கனகாம்பரம் ரூ.500 லிருந்து ரூ.900க்கும், அரளி பூ ரூ.400லிருந்து ரூ.600க்கும், சாமந்தி ரூ.140லிருந்து ரூ.170க்கும், சம்பங்கி ரூ.120லிருந்து ரூ.230க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120லிருந்து ரூ.200க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.250லிருந்து ரூ.280 க்கும் விற்பனை விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Chennai ,Koyambedu market ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் தூய்மை பணி மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனம் தேர்வு