- தென் ஆப்பிரிக்கா
- பாக்கிஸ்தான்
- 2ஆம் டி20ஐ
- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
- பாகிஸ்தான் கிரிக்கெட்
- டி 20 ஐயில்
- தின மலர்
செஞ்சூரியன்: பாகிஸ்தானுடனான 2வது டி20 போட்டியில் அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த 10ம் தேதி நடந்த போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு, செஞ்சூரியன் நகரில் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் 2வது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற பாக். பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் முகம்மது ரிஸ்வான்11 ரன்னிலும், சயீம் அயூப் அபாரமாக ஆடி 57 பந்துகளில் 98 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. இதையடுத்து, 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. துவக்க வீரர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் பேட்டிங்கில் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறந்தன. 63 பந்துகளை சந்தித்த அவர், 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை விளாசி 117 ரன் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். 19.3 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஹெண்ட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
The post 2வது டி20 போட்டியில் பாக்.,கை துவம்சம் செய்த தென் ஆப்ரிக்கா அணி appeared first on Dinakaran.