×

ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் – தலைவாஸ் மோதல்

புனே: புரோ கபடி போட்டியின் 11வது தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. களத்தில் உள்ள 12 அணிகளில் முதல் அணியாக அரியானா ஸ்டீலர்ஸ், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சிய 5 இடங்களுக்கான போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, யு மும்பா, யுபி யோதாஸ், தெலுங்கு டைன்ஸ், நடப்பு சாம்பியன் புனேரி பல்தன், ஜெய்பூர் பேந்தர்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.

சென்னை அணியாக கருதப்படும் தமிழ் தலைவாஸ் இன்னும் ஆட வேண்டிய 4 ஆட்டங்களில் வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள் அதன் பிளே ஆப் வாய்ப்பை முடிவு செய்யும். இந்நிலையில் இன்று இரவு புனேயில் நடைபெறும் 113வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் அணியை எதிர்த்து தலைவாஸ் அணி களம் காண இருக்கிறது.

The post ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் – தலைவாஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Jaipur Panthers ,Thalaivas ,Pune ,Pro Kabaddi League ,Haryana Steelers ,Patna Pirates ,Dabang Delhi ,Dinakaran ,
× RELATED புரோ கபடி லீக் தொடரில் பிளே ஆப்...