மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. முதல் டி20 ஆட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது. அடுத்து 2 ஆட்டங்களும் முறையே டிச.17, டிச.19 தேதிகளில் நடைபெறும். இந்த 3 ஆட்டங்கள் நவி மும்பையில் நடக்கும். ஒருநாள் ஆட்டங்கள் டிச. 22, 24, 27 தேதிகளில் குஜராத் வதோராவில் நடக்கும்.
அவற்றில் முதல் 2 ஆட்டங்கள் பகல்/இரவு ஆட்டங்களாகவும், 3வது ஆட்டம் பகல் நேர ஆட்டமாகவும் நடத்தப்படும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மோதவுள்ள இந்திய மகளிர் டி20 அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் செயல்படுவர். தவிர, நந்தினி காஷ்யப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா செத்ரி, தீப்தி சர்மா, சஜனா சஜீவன், ராக்வி பிஸ்ட், ரேணுகா சிங் தாக்கூர், பிரியா மிஸ்ரா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
The post வெ.இ. மகளிரணியுடன் இன்று முதல் டி20 appeared first on Dinakaran.