ஹாமில்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இந்த போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அவரின் மனைவி, குழந்தைகள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில், வில்யங் (42), கேப்டன் டாம் லதாம் (63 ரன்) முதல் விக்கெட்டிற்கு 103 ரன் எடுத்து சிறப்பாக தொடக்கம் அளித்தனர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 18, கேன் வில்லியம்சன் 44, டேரில் மிட்செல் 14, டாம் ப்ளன்டெல் 21, பிலிப்ஸ் 5 ரன்னில் அவுட் ஆகினர். 73 ஓவரில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன் எடுத்திருந்தது.
The post இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்ட்: 239 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்த நியூசிலாந்து appeared first on Dinakaran.