×

அமெரிக்க காப்புரிமையை மீறுவதாக ஓபன் ஏஐ பற்றி குற்றம் சாட்டிய இந்திய வம்சாவளி மர்ம மரணம்

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குபெர்டினோ பகுதியில் பிறந்து வளர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி(26). கணினி அறிவியல் முடித்த இவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அமெரிக்காவின் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நான்காண்டுகளாக ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுசீர் பாலாஜி திடீரென்று “ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்க பதிப்புரிமை சட்டங்களை மீறி உள்ளது” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் “சான்பிரான்சிஸ்கோவின் புக்கனான் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் 26ம் தேதி சுசீர் பாலாஜி மர்மமாக இறந்தார். அவரது சடலம் அங்கு கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவலை சான்பிரான்சிஸ்கோ காவல்துறை அலுவலகம், தலைமை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை உறுதி செய்துள்ளன” என தி மெர்குரி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் செய்தி வௌியிட்டுள்ளது.

The post அமெரிக்க காப்புரிமையை மீறுவதாக ஓபன் ஏஐ பற்றி குற்றம் சாட்டிய இந்திய வம்சாவளி மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : OpenAI ,New York ,Susheer Balaji ,Cupertino ,California, USA ,US ,
× RELATED தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் உடல் அமெரிக்காவில் அடக்கம்