×

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் குளமாக மாறிய புற்றுநோய் மருத்துவமனை: நோயாளிகள் கடும் அவதி

காஞ்சிபுரம், டிச. 13: காஞ்சிபுரம் காரப்பேட்டை அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி மண்டலம் காரணமாக காஞ்சிபுரத்தில் காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் காலை 6 மணி முதல் 2 மணி வரை கடந்த 8 மணி நேரத்தில் 46 சென்டிமீட்டர் மழை பொழிவானது பெய்திருக்கிறது. இந்த மழை பொழிவானது விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே மழை நீர் தேக்கமடைந்துள்ளது.

அந்த வகையில், காஞ்சிபுரம் காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் சுமார் 2 அடி அளவிற்கு கால்முட்டி அளவிற்கு மழைநீரானது தேக்கமடைந்துள்ளது. இதனால், மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இது மருத்துவமனை வளாகம் என்றாலும் கூட இங்கு வந்து செல்லக்கூடிய நோயாளிகளும், அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், அவர்களின் உடன் வரும் உதவியாளர்களும் இங்கு அமர்ந்து உணவருந்தவும்,காற்றோட்டமாக அமரவும் பயன்படுத்தக்கூடிய இடம் என்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அவ்வப்போது பெய்யும் மழையின் போதும், ஒவ்வொரு பருவமழையின்போதும் இங்கு மழை நீரானது குளம்போல் தேங்கி நிற்பது வாடிக்கை என நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து நிரந்தரமாக மழை காலங்களிலும் இப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக வடிகால் வசதியினை ஏற்படுத்தி மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சை பெற வந்து செல்லும் வகையில் நடவடிக்கயினை மேற்கொண்டிட வேண்டும் என்பதே நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நோயாளிகளுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் மழை காலங்களில் இது போன்ற சிரமங்களும் ஏற்படுகிறது வாடிக்கையாக உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகமும், மருத்துவ நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post காஞ்சிபுரம் காரப்பேட்டையில் குளமாக மாறிய புற்றுநோய் மருத்துவமனை: நோயாளிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Kancheepuram Karapettai cancer hospital ,Kanchipuram ,Kanchipuram Garappettai Anna Cancer Hospital ,Bay of Bengal ,Kancheepuram ,
× RELATED போக்குவரத்து மாற்றத்தால் வியாபாரம்...