செங்கல்பட்டு: திருப்போரூரில் நாளை, ‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடக்கிறது. அதில், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கலாம் என்று கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களை நாடி, மக்கள் குறைகளைக்கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களைத்தேடி உங்கள்ஊரில்’ என்ற புதிய திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயலாக்கும் நோக்கில்வரும் நாளை (18ம் தேதி) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களால், திருப்போரூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்படும். இந்நிகழ்வின், ஒரு பகுதியாக நாளை மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை “திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்” பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது குறைதீர் மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் திருப்போரூரில் நாளை கலெக்டரிடம் மனு வழங்கலாம் appeared first on Dinakaran.