- இயக்குனர்
- திருப்பூருர்
- உதவி வேளாண் இயக்குநர்
- Amutha
- திருப்பூரு யூனியன்
- விவசாயம்
- உதவி இயக்குனர்
- சித்திலாப்பாக்கம்
- தம்பிராராம்...
- உதவி இயக்குனர்
- தின மலர்
திருப்போரூர்: பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்வதற்கு உரிமம் வாங்க வேண்டும் என்று வேளாண்துறை உதவி இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். திருப்போரூர் ஒன்றிய வேளாண்துறை உதவி இயக்குநர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்போரூர் ஒன்றியம் மற்றும் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் வட்டாரங்களில் பல்வேறு கடைகள் மற்றும் பெரிய அளவிலான டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி விரட்டி, பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு விற்பனை செய்பவர்கள் பெஸ்ட் கண்ட்ரோல் விதியின்படி அரசுக்கு கட்டணம் செலுத்தி உரிய உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற்ற பின்னரே வீடுகளில் பயன்படுத்தப்படும் பூச்சி விரட்டி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். மேலும், அவற்றை உணவு பொருட்களின் அருகில் வைத்து விற்பனை செய்யக்கூடாது. எனவே, அனைத்து சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் இவற்றை விற்பனை செய்வதற்காக தங்களின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் உரிய உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும். விவரங்களுக்கு திருப்போரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post பூச்சிக்கொல்லி மருந்து விற்க உரிமம் கட்டாயம் : வேளாண்துறை உதவி இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.