சென்னை: அரசு அதிகாரிகளை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பதிவுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் சார் பதிவாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. முதல்வர் இதில் தலையிட்டு, பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: கன்னியாகுமரி, மதுரை மாவட்டத்தில் சார் பதிவாளர் மீதும் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசு அதிகாரிகளின் மீது இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post அரசு அதிகாரிகளை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை பதிவுத்துறை அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும்: ஓபிஎஸ், டிடிவி கோரிக்கை appeared first on Dinakaran.